ஆப்நகரம்

லட்சுமி ராமகிருஷ்ணனை வறுத்தெடுத்த ரங்கராஜ் பாண்டே!

லட்சுமி ராமகிருஷ்ணனை வறுத்தெடுத்த ரங்கராஜ் பாண்டே!

TOI Contributor 11 Dec 2016, 5:32 pm
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திவரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதில் சாமான்ய மக்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு சொல்வது போல் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிகழ்ச்சியை திரைப்படங்களில் கிண்டலடித்து காட்சிகள் அமைக்கப்பட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகர்கள், இயக்குநர்கள் பலருடன் சண்டையிட்டு வந்தார். நடிகை ஸ்ரீபிரியா கூட பொதுமக்களின் பிரச்னைகளில் தலையிட நடிகைகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதற்கு தான் நீதிமன்றம் இருக்கிறதே என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
Samayam Tamil rangaraj panday fight with lakshmi ramakrishnan in tv show
லட்சுமி ராமகிருஷ்ணனை வறுத்தெடுத்த ரங்கராஜ் பாண்டே!


இந்நிலையில் தந்தி டிவியில் ஒளிபரப்பப்படும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் லட்சுமி ராமகிருஷ்ணன் திணறினார். அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டார். அடுத்தவர் பொண்டாட்டி ஓடிப்போவதை ஏன் சபைக்கு கொண்டு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், நானும் என் பிரச்னைகளை சமூக வலைதளங்களில் சொல்வேன். என் குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் கூட என்னை சேர்க்கவில்லை என்று பதில் அளித்தார். இப்படி பல்வேறு கேள்விகளை கேட்டு அசரடித்தார். இது குறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தொகுப்பாளர் பாண்டேவுக்கு நன்றி கூறியுள்ள அவர், மக்களின் கேள்விகள் அனைத்தையும் நீங்கள் முன் வைத்தீர்கள் என்று கூறியுள்ளார்.

Thank you Mr.Panday (Thanthi tv)u raised many of our voices..every question was a gem👏👏lets take it forward with people like u 🙏 — sripriya (@sripriya) December 11, 2016 Anchor Rangaraj Pandey Fight With Actress Cum Director Lakhmi Ramakrishnan In Thanthi TV Show.

அடுத்த செய்தி

டிரெண்டிங்