ஆப்நகரம்

தல அஜித்துக்கு வில்லனான ரங்கராஜ் பாண்டே!?

தல அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 31 Jan 2019, 5:55 pm
தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை அடுத்து நடிகர் அஜித், எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.. இந்தப் படம் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.
Samayam Tamil ajith-pink


இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகை நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் படத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே மற்றும், ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்கினற்னர்.

தற்போது இந்தப் படத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. அதாவது பாதிக்க மூன்று பெண்களுக்காக வாதாடும் வக்கீலாக அஜித் நடிக்க அவரை எதிர்த்து எதிர் தரப்பு வக்கீலாக தான் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்