ஆப்நகரம்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பலாத்கார மிரட்டல்: கொந்தளிக்கும் பிரபலங்கள்

விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளவாசி ஒருவர் பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளார். அதே நபர் கஸ்தூரியிடமும் தரக்குறைவாக பேசியுள்ளார்.

Samayam Tamil 20 Oct 2020, 3:21 pm
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து விஜய் சேதுபதி அதில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் சமூக வலைதளவாசி ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்து ட்வீட் போட்டுள்ளார்.
Samayam Tamil vijay sethupathi


அந்த ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்கள் அவரை திட்டி கமெண்ட் போட்டுள்ளனர். உடனே அவர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். அந்த நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு சமூக வலைதளத்தில் பலாத்கார மிரட்டல் விடுத்த குஜராத்தை சேர்ந்த பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர். அதே போன்று விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த நபர் கஸ்தூரியிடமும் கேவலமாக பேசியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து விஷ்ணு விஷால் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதை பார்த்த கஸ்தூரியோ, அட போங்கப்பா கடுப்பேத்திக்கிட்டு என்று கமெண்ட் அடித்தார்.

கஸ்தூரியின் கமெண்ட்டை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவர், மேடம் நீங்கள் இப்ப உங்க கணவருடன் இருக்கீங்களா? இல்லை தனியா இருக்கீங்களா? தனியா இருந்தா சொல்லுங்க நான் இப்போ ஃப்ரீ தான் என்றார்.
அந்த நபரின் கமெண்ட்டை பார்த்த கஸ்தூரி,

டியர் அஜித் ரசிகர்களே,

சரி. உங்க வழிக்கே வருகிறேன். இந்த பன்னி மீது ஏதாவது நடவடிக்கை உண்டா. அவன் ஃப்ரீயாக இருக்கிறானாம். இது தான் அவன் வலிமையின் ஐடியாவா?. நீங்கள் கவுரமானவர்களாக இருந்தால் அதை நிரூபிக்க இது தான் வாய்ப்பு. ஐ ஆம் வெயிட்டிங் என்று தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த மற்றொரு ரசிகரோ, இது எல்லாம் உங்களால் தான். நீங்கள் தான் ஆரம்பித்து வைத்தீர்கள். அவர்கள் பதில் அளிக்கிறார்கள். இது உங்கள் கையில் தான் உள்ளது என்றார். அதை பார்த்த கஸ்தூரி, நான் எப்படி துவங்கி வைத்தேன், என்னத்த துவங்கி வைத்தேன், இது போன்ற செயலை ஆதரிக்கிறீர்களா என்றார்.

உங்களை பற்றி மோசமாக கமெண்ட் போடுபவர் யாராக இருந்தாலும் அதற்கு அஜித் என்ன செய்வார். எதற்கெடுத்தாலும் அஜித் பெயரை இழுக்க வேண்டாம். அஜித் ஒருபோதும் இது போன்ற செயல்களை ஆதரித்தது இல்லை. உங்களை பற்றி தரக்குறைவாக பேசியவன் தல ரசிகன் இல்லை. அவன் தல அஜித் சாரின் பெயரை கெடுக்கப் பார்க்கிறான். அஜித்தின் புகைப்படத்தை பயன்படுத்தினால் உடனே அவன் தல ரசிகனா, என்னம்மா உங்க லாஜிக். உண்மையான தல ரசிகர் இப்படி பேச மாட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

அப்படி என்றால் அந்த நபர் பற்றி புகார் தெரிவியுங்கள் என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

அந்த 2 வார்த்தைக்காக விஜய் சேதுபதியை இன்னும் விளாசும் நெட்டிசன்ஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்