ஆப்நகரம்

விஜய் சேதுபதி மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Oct 2020, 12:18 pm
இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதை பார்த்த முத்தையா முரளிதரனோ, தன் படத்தில் இருந்து விலகிவிடுமாறு விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டு நன்றி, வணக்கம் என்று தெரிவித்தார் விஜய் சேதுபதி.
Samayam Tamil vijay sethupathi


அந்த 2 வார்த்தைக்காக விஜய் சேதுபதியை இன்னும் விளாசும் நெட்டிசன்ஸ்

அதை பார்த்தவர்கள் நன்றி, வணக்கம் என்றால் என்ன என்று விஜய் சேதுபதியிடம் கேட்டார்கள். அதற்கு அவரோ, எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் என்றார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஒருவர் பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்தார். விஜய் சேதுபதியின் மகளை பலாத்காரம் செய்தால் தான் அவருக்கு இலங்கை போரில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட வலி புரியும் என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் கோபம் அடைந்தார்கள். ஒரு சிறுமிக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் அந்த நபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் ட்வீட் செய்துள்ளார்.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த அந்த நபர் தன் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அறிந்து பலரும் போலீசாரை பாராட்டியுள்ளனர்.

முன்னதாக விஜய் சேதுபதி விவகாரம் தொடர்பாக பார்த்திபன் கூறியதாவது,

விசேஷமான செய்திகளை பரப்புங்கள்
வி.சே சம்மந்தப்பட்ட sensitive செய்தி (cybercrime)விசாரிப்பதைக்கூட பகிராமல் ரகசியம் காக்க!
‘வக்ர துண்டாய தீமஹி’-சரியான அர்த்தம் வேறாக இருக்கலாம்.ஆனால் நெஞ்சில் வக்கிரம் பிடித்தவனை-பிடித்ததனை துண்டுத் துண்டாக நறுக்கி அத்தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும் என்றார்.
நடிகரும், ச.ம.க. தலைவருமான சரத்குமார் கூறியிருப்பதாவது,

சமூக வலைதளங்களில் தரங்கெட்டு, தராதரம் கடந்து கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பெண் குழந்தைகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.

உரிமை, சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம், என்ன நடக்க போகிறது என்று மெத்தனமாக சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் அயோக்கியர்களை தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் உடனடியாக கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கி இது போன்ற தரங்கெட்ட செயல்களை கட்டுப்படுத்தி, ஒழுக்கத்துடன் சமூகம் சீரடைய செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்