ஆப்நகரம்

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ள ராதிகா ஆப்தே..!

கபாலி படத்திற்கு பிறகு மற்றொரு தமிழ் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 25 Nov 2016, 2:51 am
கபாலி படத்திற்கு பிறகு மற்றொரு தமிழ் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil rathika apte going to act as a feminist in a upcoming tamil film
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ள ராதிகா ஆப்தே..!


நிர்வாண காட்சிகளில் நடித்ததற்காக இந்தியா முழுவதும் ராதிகா ஆப்தேவுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும்,எதை பற்றியும் கவலைப்படாமல் தனது நடிப்பு பணியை சிறப்பாக செய்து வருகிறார் .குறிப்பாக சவாலான கதாபாத்திரங்களை ராதிகா ஆப்தே தேடித்தேடி நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டாலும்,தமிழ் திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்திருப்பதால்,அவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல பெயர் உள்ளது.இறுதியாக தமிழில் அவர் பணியாற்றிய சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில்,அவரின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.பெண்கள் உரிமையை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில்,ராதிகா ஆப்தேவின் வேடம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதால் இதில் அவர் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் மிஷ்கினின் தம்பியான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள சவரக்கத்தி திரைப்படம் வெளியானதும்,ராதிகா ஆப்தே நடிக்கவுள்ள அவரது அடுத்த படத்திற்கான வேலைகள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rathika Apte going to act as a feminist in a upcoming Tamil Film

அடுத்த செய்தி

டிரெண்டிங்