ஆப்நகரம்

DGP RC Kudawla: இப்போ என்னுடைய அப்பா டிஜிபி ஆயிட்டாரு: விஷ்ணு விஷால் மகிழ்ச்சி!

எனது அப்பா டிஜிபி ஆகிவிட்டார் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2019, 5:48 pm
எனது அப்பா டிஜிபி ஆகிவிட்டார் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vish


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் இளம் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சமிபத்தில் இவர் பிரபு சாலமன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சண்டைக் காட்சியில் இவருக்கு பலமாக அடிபட்டது. அதன் காரணமாக அவருக்கு கையில் இருந்து முதுகு தண்டு வரை சில பிரச்சனைகள், அவ்வப்போது தனது சிகிச்சை எப்படி இருக்கிறது என்று டுவிட்டரில் தகவல் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.

இப்போது அவர் தன்னுடைய தந்தை குறித்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தை குடவாலாவுக்கு டிஜிபி பதவி கிடைத்துள்ளது. மிகுந்த சந்தோஷம் என பதிவு செய்துள்ளார். அதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்