ஆப்நகரம்

Ravinder Mahalakshmi: மகாலட்சுமி வீட்டு விசேஷம்: வீடியோவுடன் ரவீந்தர் பகிர்ந்த தகவல்..!

ரவீந்தர், மகாலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம் குறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 15 Mar 2023, 7:26 pm
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மேலும் இவர்களின் திருமணம் குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
Samayam Tamil ரவீந்தர் - மகாலட்சுமி
ரவீந்தர் - மகாலட்சுமி


சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மகலாட்சுமி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்தார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவரின் இரண்டாம் திருமணமும் சர்ச்சையாக பேசப்பட்டது. அத்துடன் இவரின் திருமணம் குறித்து இணையத்தில் பல விமர்சனங்களும், கருத்துக்களும் வலம் வந்த வண்ணம் இருந்தன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது திருமண வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தார் மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே அனில் என்பவருடன் திருமணமாகி சச்சின் என்ற மகன் இருக்கும் நிலையில், அவரை பிரிந்தார். அதனை தொடர்ந்து லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி.

AK 62: 'ஏகே 62' அறிவிப்பு எப்பதான் வெளியாகும்.?: கடைசில இப்படி ஆகிருச்சே..!

கல்யாணத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் இருவரும் ஜோடியாக பல பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் இவர்கள் இருவரும் தங்களது ஆறாவது மாத திருமணம் நாளை விமர்சையாக கொண்டாடினார்கள். இந்நிலையில் மகாலட்சுமி, ரவீந்தர் வீட்டில் விசேஷம் ஒன்று நடந்துள்ளது.

Vignesh Shivan: கழட்டி விட்ட அஜித்.. விக்கிக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் ஆண்டவர்.!

அதாவது தங்களது வீட்டில் சண்டி ஹோமம் நடத்தியுள்ளனர் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதியினர். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரவீந்தர். தங்கள் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் ரவீந்தர், மகாலட்சுமி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்