ஆப்நகரம்

திரையிலும் தோன்ற உள்ள நிஜ காதலர்கள்!

நிஜ காதலர்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் படத்திலும் காதலர்களாக நடிக்கவுள்ளனர்.

Samayam Tamil 12 Apr 2018, 3:00 pm
நிஜ காதலர்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் படத்திலும் காதலர்களாக நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil vignesh-nayan


நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர். நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ இயக்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் வாய்ப்பு விக்னேஷுக்கு வந்தது. ஸ்கிரிப்ட் ரெடியாகாததால் வாய்ப்பு கைவிட்டுப் போனது. அந்த வாய்ப்பு தற்போது எம்.ராஜேஷ் கைமாறியுள்ளது.

இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனை ஹீரோவாக்கும் முயற்சியில் நயன்தாரா ஈடுபட்டிருக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக அவரே நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பதுடன், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை விக்னேஷ் சிவனிடமே கொடுப்பதா அல்லது வேறு இயக்குனரிடம் கொடுப்பதா என்று இருவரும் யோசித்து வருகின்றனர். நிஜவாழ்வில் காதல் ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவன், நயன்தாரா தற்போது திரையிலும் காதல் ஜோடியாக ஜொலிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்