ஆப்நகரம்

அந்த 'செக்' தான் காரணமா? இளம் நடிகை மர்ம மரணத்தில் வெளியான பரபரப்பு தகவல்!

நடிகை சஹானா மர்மமான முறையில் மரணமடைந்துள்ள நிலையில் அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 May 2022, 5:38 pm
நடிகை சஹானா மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil reason behind fight betwee sahana and her husband
அந்த 'செக்' தான் காரணமா? இளம் நடிகை மர்ம மரணத்தில் வெளியான பரபரப்பு தகவல்!



ஜன்னல் கம்பியில்

மலையாள நடிகையும் விளம்பர மாடலுமான நடிகை சஹானா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜன்னல் கம்பியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் தெரிவித்தார்.

தீவிர விசாரணை

ஆனால் தற்கொலைக்கான அறிகுறி எதுவும் இல்லாததால் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி சஹானாவுக்கும் அவரது கணவர் சஜ்ஜாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அடிக்கடி தகராறு

குடிப்பழக்கம் உள்ள சஜ்ஜாத் குடித்துவிட்டு அடிக்கடி சஹானாவிடம் பிரச்சனை செய்து வந்ததாகவும் அடித்து கொடுமை படுத்தியதாகவும் சஹானாவின் தயார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சஹானாவுக்கும் அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சனை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

செக்கால் வந்த பிரச்சனை

அதாவது சஹானா மலையாள விளம்பர படங்கள் மட்டுமின்றி தமிழ் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதனால் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அடுத்தடுத்து 3 மலையாள படங்களில் நடித்துள்ளார் சஹானா. இந்தப் படங்களுக்கு சஹானா பெற்ற செக்கை யாருடைய கணக்கில் டெப்பாஸிட் செய்வது என்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மரணத்திற்கு காரணம்

சஹானாவின் பிறந்தநாளான நேற்று முன்தினம் இரவும் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சஹானாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகும் பட்சத்தில் சஹானா மரணத்திற்கான காரணம் உண்மை காரணம் தெரியவரும் என காத்திருக்கின்றனர் குடும்பத்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்