ஆப்நகரம்

Vijay: 'பீஸ்ட்' படம் சொதப்பியதுக்கான காரணம் இதுதான்.. வெளியான பகீர் தகவல்.!

கடந்த வாரம் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Samayam Tamil 20 Apr 2022, 9:20 am
நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் 'பீஸ்ட்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
Samayam Tamil Beast
Beast


சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான 'பீஸ்ட்' படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. திரைக்கதையில் நெல்சன் கோட்டைவிட்டு விட்டதாக விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர். கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் வித்தியாசமான படமாக 'பீஸ்ட்' இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

'தலைவர் 169' படத்திற்காக ரஜினி செய்த அதிரடி மாற்றம்: ஆடிப்போன நெல்சன்.!
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தை தன்னுடைய பாணியில் குடும்ப செண்டிமென்ட் கலந்த காமெடி கதையாக உருவாக்கினாராம் நெல்சன். ஆனால் விஜய் ஆக்ஷன் படமாக எடுக்க சொல்லியதால் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். மேலும் திரைக்கதையிலும் விஜய்யின் தலையீடு அதிகமாக இருந்ததாம். இதுதான் 'பீஸ்ட்' படத்திற்கு குவியும் நெகட்டிவ் விமர்சனத்திற்கு காரணம் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

'பீஸ்ட்' படத்தை முடித்து கையோடு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'தளபதி 66' படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய். இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், தமன் இசையமைப்பாளராகவும் பணிபுரிய உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்