ஆப்நகரம்

இதனால் தான் அஜித் வெளியில் வருவதில்லை: அலிஷா அப்துல்லா வெளியிட்ட புகைப்படம்

தல அஜித் பொது இடங்களுக்கு ஏன் வருவதில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார் பிரபல ரேஸர் அலிஷா அப்துல்லா.

Samayam Tamil 11 Apr 2020, 9:53 am
ஆரம்பகாலத்தில் மற்ற நடிகர்களை போலவே பொது இடங்களுக்கு வருவது, மீடியாவுக்கு பேட்டி கொடுப்பது என இருந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதை முழுமையாக தவிர்த்தார் அவர்.
Samayam Tamil Alisha Abdulla with Ajith Kumar


எந்த பொது நிகழ்ச்சிக்கும் அவர் வருவத்தில்லை. விஜய் போன்ற நடிகர்கள் இசை வெளியீட்டு விழா நடத்தி ரசிகர்களை சந்தித்தாலும், அஜித் அதற்கு நேர்மாறாக தன் படத்திற்காக எந்த விழாவும் நடத்துவதில்லை. இருப்பினும் அவருக்கு உள்ள ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.

இப்படி அஜித் வெளியில் வராமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றி பிரபல பைக் ரேசர் மற்றும் சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ள அலிஷா அப்துல்லா ட்விட்டரில் கூறியுள்ளார்.

அஜித் ஒருமுறை சென்னையில் உள்ள ரேஸ் டிராக்கிற்கு வந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அலிஷா. அவரை மக்கள் சூழ்ந்துகொண்டனர், நடக்க கூட விடவில்லை, இப்படி நடப்பதால் தான் அஜித் வெளியில் கூட வருவதில்லை என அவர் தெரிவித்துளளார்.

அவரை ஒரு இன்ச் கூட நகர விடவில்லை. அன்று தான் அஜித் இந்த முடிவை எடுத்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.



தல அஜித் தற்போது தனது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அவர் ஹெச்.வினோத் உடன் கூட்டணி சேர்வது இது இரண்டாவது முறை.

போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஷூட்டிங் தடைபட்டுள்ளதால் அது சொன்ன தேதியில் வெளிவருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் சண்டை காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருந்தார் ஹெச்.வினோத். அதுவும் கொரோனாவால் தடை பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்