ஆப்நகரம்

Dhanush: தனுஷ் பற்றி பலருக்கும் தெரியாத விஷயத்தை போட்டுடைத்த பிரபலம்..ஷாக்கான ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் தெலுங்கு படங்களில் நடிப்பதை பற்றி பேசிய பிரபல பத்திரிகையாளர்

Samayam Tamil 1 Dec 2022, 8:24 am
Samayam Tamil reason why dhanush choosing telugu movies
Dhanush: தனுஷ் பற்றி பலருக்கும் தெரியாத விஷயத்தை போட்டுடைத்த பிரபலம்..ஷாக்கான ரசிகர்கள்..!


லைன் அப்ஸ்

தனுஷ் நானே வருவேன் திரைப்படத்திற்கு பிறகு வாத்தி படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார் தனுஷ். இதையடுத்து அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இந்நிலையில் இதைத்தொடர்ந்து மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் தனுஷ் பாலிவுட் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

தெலுங்கில் ஆதிக்கம்

இந்நிலையில் தனுஷ் தொடர்ந்து தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர், தனுஷ் தற்போது அதிகமாக தெலுங்கு படங்களில் நடிப்பதால் தெலுங்கு கற்றுக்கொள்கின்றனர் என தெரிவித்தார். மேலும் அவர் அடிப்படையிலேயே தெலுங்கு என்பதால் மிகவும் எளிமையாக தெலுங்கை கற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார். இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன தனுஷ் தமிழ் கிடையாதா ன்று ஷாக்காகி கேட்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

டிரெண்டிங்