ஆப்நகரம்

பிக்பாஸ்2 டைட்டில் வின்னர் - ரித்விகா உண்மை முகம் என்ன?

பிக்பாஸ் சீசன் 2வில் வெற்றிபெற்ற நடிகை ரித்விகா பி.எஸ்.பி. இயற்பியல் பட்டதாரி என கூறப்படுகிறது.

Samayam Tamil 1 Oct 2018, 5:12 pm
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 2 நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றதால் ஒரு வாரம் கூடுதலானது.
Samayam Tamil rithvika


இந்த சீசன் 2 போட்டியில் மக்களின் விருப்பத்திற்குரிய ரித்விகாவே டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனால் மக்கள் சந்தோஷமடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நடிகை ரித்திகா வாழ்க்கைப் பற்றிய சில விஷயங்கள்: நடிகை ரித்விகா, 1992, ஆகஸ்ட் 5 பிறந்தார். படிப்பிலும் கெட்டிக்காரர். இவர் பி.எஸ்.சி. இயற்பியல் பட்டதாரி. சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆசை இருந்ததால் சின்ன சின்னதாக நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திலும், விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’ படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார். அடுத்தடுத்து ரஜினியின் ‘கபாலி’, விக்ரமின் ‘இருமுகன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன் கடைசியாக நடித்த படம் ‘டார்ச் லைட்’. இந்தப் படமும் வெளியானது. இனி தமிழ் சினிமாவில் ரித்விகாவுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்