ஆப்நகரம்

புது மாப்பிள்ளை விஷ்ணு விஷால் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்ட கொரோனா

விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் பதிவுத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.

Samayam Tamil 13 Apr 2021, 4:34 pm

ஹைலைட்ஸ்:

  • ஏப்ரல் 22ம் தேதி ஜுவாலாவுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் திருமணம்
  • ஹைதராபாத்தில் நடக்கும் விஷ்ணு விஷால் திருமணம்
  • மோகன்தாஸ் படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil vishnu vishal
விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்தனர். லாக்டவுன் நேரத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் என்று கூறி பத்திரிகையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
22ம் தேதி எனக்கும், ஜுவாலாவுக்கும் திருமணம்: பத்திரிகையை வெளியிட்ட விஷ்ணு விஷால்பத்திரிகையை பார்த்தவர்கள் விஷ்ணு விஷாலுக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருமண திட்டம் குறித்து விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது,
எங்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது. பதிவுத் திருமணம் தான். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொறுப்புடன் செயல்பட விரும்புகிறோம். எனவே, எங்கள் திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளோம்.

நான் அடுத்த வாரம் ஹைதராபாத் செல்வேன். மோகன்தாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். 19 அல்லது 20ம் தேதி இந்த ஷெட்யூல் முடிந்துவிடும். அதன் பிறகு ஹைதராபாத் செல்கிறேன். திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் வீட்டில் வைத்து நடக்கும்.

திருமண ஏற்பாடுகளை எல்லாம் ஜுவாலா தான் கவனித்து வருகிறார். நான் சும்மா போய் தாலி கட்டினால் போதும் என்று நினைக்கிறேன்.

தேனிலவு திட்டம் எல்லாம் இல்லை. கொரோனாவால் நிலைமை சரியில்லை. அதனால் நாங்கள் எங்கும் செல்லப் போவது இல்லை. திருமணத்திற்கு பிறகு குடும்பத்தார், நண்பர்களுடன் சில நாட்கள் இருந்துவிட்டு அவரவர் வேலைக்கு கிளம்பிவிடுவோம் என்றார்.

தனக்கும், ஜுவாலாவுக்கும் விரைவில் திருமணம் என்று காடன் பட விளம்பர நிகழ்ச்சியில் தெரிவித்தார் விஷ்ணு விஷால். அதன் பிறகு ஜுவாலா பேச்சலரட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்களை கடந்த மாதம் வெளியிட்டார்.

திருமணம் நெருங்குவதால் தான் இந்த பார்ட்டி என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேரடியாக பத்திரிகையை வெளியிட்டுவிட்டார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்