ஆப்நகரம்

யுடியூப் சேனலில் வெளியான தேவி, ரெமோ திரைப்படங்கள்!

யுடியூப் சேனலில் வெளியான தேவி, ரெமோ திரைப்படங்கள்!

TOI Contributor 16 Oct 2016, 5:47 am
தமிழ் சினிமாவிற்கு திருட்டு டிவிடி மிகப்பெரும் பிரச்னையாக இருந்துவரும் நிலையில் அதனை மிஞ்சும் வகையில் உருவெடுத்துள்ளது ஆன்லைனில் திரைப்படம் வெளியாவது. படம் ரிலீஸான மதியமே இணையத்தில் பதிவேற்றி விடுகின்றனர். ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கூட இப்படி இணையத்தில் திரைப்படம் வெளியான அன்றே அப்லோட் செய்யப்பட்டது. பதிவேற்றிய இணையதளத்தை முடக்க சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும், வேறொரு தளத்தில் வெளியிட்டுவிடுகின்றனர்.
Samayam Tamil remo and devi full movie in you tube
யுடியூப் சேனலில் வெளியான தேவி, ரெமோ திரைப்படங்கள்!


யுடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றினால் அதனை நீக்குவது, உரிமம் மூலம் நஷ்ட ஈடு பெறுவது சாத்தியம். ஆனால் சொந்த டொமைனில் இருந்தால் எதுவுமே செய்ய முடியாது. அதனால் யுடியூப்பில் படம் வெளியாகாமல் இருப்பதே நல்லது என்று தயாரிப்பாளர்கள் நினைத்தனர். ஆனால் ரெமோ திரைப்படத்தை யுடியூப்பிலும் வெளியிட்டுவிட்டார்கள். தமிழன்டா என்ற யுடியூப் சேனலில் தேவி மற்றும் ரெமோ திரைப்படங்கள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. இவை விரைவில் நீக்கப்பட்டாலும் மாறி, மாறி வேறு சேனல்களில் பதிவேற்றப்படலாம் என்பதால் இதற்கு திரை உலகம் விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்