ஆப்நகரம்

‘ரெமோ’வுக்கு கிடைத்தது ‘யு’ சான்றிதழ்!

‘ரெமோ’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

TOI Contributor 28 Sep 2016, 4:13 pm
‘ரெமோ’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Samayam Tamil remo got u certificate
‘ரெமோ’வுக்கு கிடைத்தது ‘யு’ சான்றிதழ்!


சிவகார்த்திகேயன் , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை தணிக்கை குழுவினர் நேற்று பார்த்தனர். இந்தப் படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்ற வகையில் தணிக்கை குழுவினர் ‘ரெமோ’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

24 ஏஎம் தயாரிப்பில்,  பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ‘ரெமோ’. மேலும் இந்தப் படத்தில்  ஸ்ரீதிவ்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிக பொருட் செலவில் தயாரான இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்துள்ளது. படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பும் உள்ளது. வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்