ஆப்நகரம்

Village Rockstar: இந்த முறை ஆஸ்கார் உறுதி... இதோ இந்த படத்துக்கு தான்

அஸ்ஸாமிய மொழி படமான “Village Rockstar” ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ திரைப்படம் 2019ம் ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Sep 2018, 4:50 pm
அஸ்ஸாமிய மொழியில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ சிறந்த திரைப்படமாக 65வது தேசிய திரைப்பட விழாவில் விருது வாங்கியுள்ளது. இதையடுத்து, இந்திய திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் குழு வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தை 2019ல் நடைப்பெற உள்ள ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Samayam Tamil village rockstar


மும்பையில் நடந்த திரைப்பட விழாவில், “ராஸி, பத்மவாத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா, குலாப்ஜாம், நடிகையர் திலகம் , பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா, பயோஸ்கோஸ்கோவாலா, மாண்டோ, 102 நாட் அவுட், பட்மன், பயானகம், அஜ்ஜி, நாட் மற்றும் காளி குலியியன்.” ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.


இதில் ரீமா தாஸ் இயக்கிய ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர், எடிட்டிங் என பன்முக தன்மை கொண்டவராக இப்பட இயக்குனர் ரீமா தாஸ் திகழ்கிறார்.


44 விருதுகள்:
இதுவரை 70க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ள இந்த படம், 4 தேசிய விருதுகள் உட்பட 44 விருதுகள் வென்றுள்ளது.
சிறந்த இடம், ஒலி பதிவு, எடிட்டிங் மற்றும் குழந்தை நட்சத்திரம் (பானித தாஸ்) ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

இசையின் மீது இருக்கும் விருப்பத்தால், தான் ஒரு ராக் ஸ்டார் போல் ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். ஆனால் வசதி இல்லாததால், தன் நண்பர்களுடன் சேர்ந்து எப்படி தன் ஆசையை பிரதிபலிக்கிறாள் என்பது தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.


வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற சிறந்த படத்தால் இந்திய திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

என்ன தான் பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் பல பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டாலும், வில்லேஜ் ராக்ஸ்டார் போன்ற பொழுதுபோக்கு, தன்னம்பிக்கையை தூண்டும் படம் விருது வாங்க வேண்டும் என்பது திரைத்துறையினரின் விருப்பமாக தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்