ஆப்நகரம்

LKG Movie in Tamilrockers: புதிய படங்களின் வசூலோடு விளையாடுறதே தமிழ் ராக்கர்ஸ்க்கு வேலையா போச்சு!

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள எல்கேஜி படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 22 Feb 2019, 3:26 pm
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள எல்கேஜி படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.
Samayam Tamil lk


இயக்குனர் கேஆர் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஜே.கே.ரித்தேஷ், ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எல்.கே.ஜி. முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக ஆர்ஜே பாலாஜிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தவொரு புதிய படம் திரைக்கு வந்தாலும், தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் தங்களது இணையதளத்தில் அந்தப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டுவிடும். அந்த இணையதளத்திற்கு மாஸ் ஹீரோ, சாதாரண ஹீரோ என்றெல்லாம் கிடையாது. எப்போதும் ஒரே குறிக்கோள் தான். தமிழ் ராக்கர்ஸில் படங்களை வெளியிடுவது. அந்த வகையில், இன்று வெளியாகியுள்ள காமெடி நடிகரும், சமூக ஆர்வலருமான ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி படத்தை தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் தங்களது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கானது அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்