ஆப்நகரம்

அஜீத் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கிய ஆர்.கே. சுரேஷ்!

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் ‘பில்லா பாண்டி’ படத்தில் அஜீத் பெயரில் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்கியுள்ளாராம்.

TNN 23 May 2017, 4:25 pm
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் ‘பில்லா பாண்டி’ படத்தில் அஜீத் பெயரில் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்கியுள்ளாராம்.
Samayam Tamil rk suresh start a ajith welfare association
அஜீத் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கிய ஆர்.கே. சுரேஷ்!


தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் தற்போது நடிகராக மாறியுள்ளார். இவர் இயக்குனர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இதுதவிர மேலும் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் ‘பில்லா பாண்டி’ மற்றும் ‘வேட்டை நாய்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதில், ‘பில்லா பாண்டி’ படத்தில் அவர் தீவிர அஜீத் ரசிகராக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் அவர் ‘எங்க குல தங்கம் அஜீத் நற்பணி மன்றம்’ என எழுதப்பட்டிருக்கும் பனியனை அணிந்து கொண்டிருக்கிறார். அதேபோல், மற்றொரு புகைப்படத்தில் அவரது தோள்பட்டையில், அஜீத் உருவம் பச்சை குத்தப்பட்டுள்ளது. எனவே, இதில் ஆர்.கே.சுரேஷ் அஜீ த்திற்கு நற்பணி மன்றம் தொடங்கியிருக்கும் தீவிர ரசிகராக மாறியுள்ளார் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்