ஆப்நகரம்

கார் விபத்தில் சிக்கிய நடிகைக்கு நேர்ந்த துயரம்!

ஓசூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் துணை நடிகை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

TNN 27 May 2017, 4:01 pm
ஓசூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் துணை நடிகை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil road rampage kills actress in hosur
கார் விபத்தில் சிக்கிய நடிகைக்கு நேர்ந்த துயரம்!


கர்நாடக மாநில பெங்களூரில் யஷ்வந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஷா சிங். இவர், எம்.ஏ.புரா பகுதியைச் சேர்ந்த பவானி என்பவருடன் காரில் சென்றிருக்கிறார்.

துணை நடிகைகளான இருவரும் துபாயில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சென்னை வந்தனர். பின், வாடகை காரில் பெங்களூரு நோக்கி வந்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்த கார், வெள்ளிக்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளி ஜங்ஷன் மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. நேராக, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில், துணை நடிகை அனுஷா சிங் மற்றும் ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு துணைநடிகை பவானி படுகாயங்களுடன் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்