ஆப்நகரம்

தளபதி விஜயின் உண்மையான சாதி என்ன தெரியுமா?

நடிகர் விஜயை பள்ளியில் சேர்த்தபோது அவரது சாதியை இந்தியன் என்று குறிப்பிட்டதாக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

TNN 23 Oct 2017, 2:47 pm
நடிகர் விஜயை பள்ளியில் சேர்த்தபோது அவரது சாதியை இந்தியன் என்று குறிப்பிட்டதாக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil s a chandrashekar reveals the cast of his son vijay
தளபதி விஜயின் உண்மையான சாதி என்ன தெரியுமா?


தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்த போதும் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

இதனிடையே, இந்த படத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து விமர்சனம் செய்யும் வசனங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. மருத்துவர்களை ஒட்டுமொத்தமாக அவமதித்துவிட்டதாக மருத்துவர்களும் கொந்தளிக்கின்றனர்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நான் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவன். என் மனைவி இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவள். இதனால், என் மகன் விஜயை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் அவனது சாதி இந்தியன் என்று குறிப்பிட்டேன். அவர்கள் பள்ளி நிர்வாகிகள் நான் தவறாக விண்ணப்பித்திருப்பதாகக் கூறினார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்