ஆப்நகரம்

மலையாள பாடலுடன் இசையுலகிற்கு முழுக்கு போட்ட பழம்பெரும் பாடகி

பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி, ஒரு மலையாளப் பாடலுடன் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

TNN 22 Sep 2016, 12:37 pm
சென்னை: பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி, ஒரு மலையாளப் பாடலுடன் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
Samayam Tamil s janaki to call it quits with a malayalam song
மலையாள பாடலுடன் இசையுலகிற்கு முழுக்கு போட்ட பழம்பெரும் பாடகி


கடந்த 1957ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது இனிமையான தனித்துவம் வாய்ந்த குரலினால் எண்ணற்ற தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்தியாவின் 'நைட்டிங்கேல்' என்று புகழாரம் சூட்டப்படும் எஸ்.ஜானகி, ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் பாட்டு பாடுவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

மலையாளத்தில் 10 கல்பனகள் படத்தில் இடம்பெறும் தாலாட்டுப் பாடல் தான் தனது இசையுலக வாழ்வின் கடைசி பாடல் என்று ஜானகி அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு வயதாகிவிட்டதாகவும், இசையுலக வாழ்வில் இருந்து சற்று ஓய்வு தேவைப்படுவ்தன் காரணமாகவும் இந்த முடிவை அறிவித்துள்ளதாக எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.

சுமார் 48,000 பாடகளை பாடியுள்ள எஸ்.ஜானகி, 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகளை வென்றுளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ள எஸ்.ஜானகிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டது. மேலும், மலையாளத்தில் தான் கடைசி பாடலை பாட வேண்டும் என்ற திட்டம் ஏதும் இல்லை. தற்செயலாக நடந்த ஒன்று என்று கூறியுள்ளார்.

ஜானகியின் இறுதிப் பாடலை ஒலிப்பதிவு செய்த இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த பாடலை பாடியதாகவும், மேலும், தாலாட்டுப் பாடல்கள் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதனால் இந்த பாடலை பாட ஒப்புக் கொண்டதாகவும் எஸ்.ஜானகி கூறியுள்ளார்.

தமிழில் இறுதியாக எஸ்.ஜானகி பாடியது 'திருநாள்' படத்தில் இடம்பெற்ற 'தந்தையும் யாரோ...' சோகப் பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்