ஆப்நகரம்

தொடர்ந்து ஐசியூ-வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்: உடல்நிலை பற்றி மருத்துவமனை புதிய அறிக்கை

கொரோனாவுடன் போராடி வரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

Samayam Tamil 15 Aug 2020, 4:35 pm
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சினிமாத் துறை பிரபலங்கள் கூட பலரும் இந்த வைரஸ் தொற்றில் சிக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு கடந்த 13ம் தேதி இரவு அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால் உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருக்கிறார்கள்.
Samayam Tamil S. P. Balasubrahmanyam


இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து நேற்று மாலை வெளிவந்தது. இந்த செய்தி சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது என்று பாலசந்தர் விரைவில் குணமடைய வேண்டுமென பிராத்திக்க துவங்கினர்.

இந்நிலையில் இன்று மாலை வெளிவந்திருக்கும் அறிக்கையில் அவர் உடல் நிலை சீராக இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். சற்றுமுன் பாலசுப்ரமணியம் உடல் நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட நிலையில் தான் இருக்கிறார் என்றும், அவர் உடல் நிலை சீராக இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்கள். அவரது உடல் நிலை பற்றி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது.

எஸ்பிபி குணமடைய வேண்டும் என நேற்று பிரபலங்கள் பலரும் பதிவிட்டிருந்த நிலையில், புதிய அறிக்கையை பார்த்துவிட்டு எஸ்பிபி உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் முழுமையாக குணமடைந்து திரும்பிவிடுவார் என்று கூறி வருகிறார்கள்.

இசையைப்பாளர் தமன் பதிவிட்டு உள்ள ட்விட்டில் "நம் பிரார்த்தனை பலிக்கிறது. எஸ்பிபி காரு உடல்நிலை தேறி வருகிறார்" என பதிவிட்டு உள்ளார்.

https://twitter.com/MusicThaman/status/1294566741977133056?s=20

அடுத்த செய்தி

டிரெண்டிங்