ஆப்நகரம்

Hrithik Roshan : கோலிவுட் , பாலிவுட் மிக்ஸ் செய்ய நினைக்கும் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக நடிகர் விஜய் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 9 May 2019, 3:42 pm

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் பல சாதனைகளை படைத்த படம் ‘இந்தியன்’. 23 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முயற்சி செய்தார்.
Samayam Tamil vijay-hrithikck


அதற்காக பூஜையும் போடப்பட்டது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை. மேக்கப் சரியில்லை, பைனான்ஸ் கிடைக்கவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டது.
"அயோக்யா" யாருன்னு தெரியனுமா? படத்த வந்து பாருங்க- விஷால்!

இந்நிலையில் இப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார் இயக்குனர் ஷங்கர். அதாவது ‘பாய்ஸ்’ பட பாணியில் புதுமுகங்கள் நடிக்கும் படம் என்றும் சொல்லப்பட்டது.
Ajith : அஜித் வந்தாலே படப்பிடிப்பு தளம் மகிழ்ச்சியாகும்!: பூர்ணிமா!

ஆனால் இடையில் ஷங்கருக்கு விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். தனக்காக ‘முதல்வன்’ பட பாணியில் ஒரு சூப்பரான கதையை தயார் செய்ய விஜய் கேட்டுள்ளாராம். அதன்படி ஷங்கரின் அடுத்த படம் விஜய் படமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 டிசம்பரில் வெளியாகிறது ’அவதார் 2’- உறுதி செய்தார் ஜேம்ஸ் கேமரூன்

அடுத்த செய்தி

டிரெண்டிங்