ஆப்நகரம்

இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல: எஸ்.ஏ.சந்திரசேகரன் தடலாடி!

படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், சண்டை இயக்குனர், கலை இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை. எனவே இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Dec 2018, 1:12 pm
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்தவ மத நல்லிணக்க விழாவில் இயக்குநரும், நடிகரும் ஆன எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். அப்போது இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கோருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
Samayam Tamil இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல: எஸ்.ஏ.சந்திரசேகரன் தடலாடி!
இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல: எஸ்.ஏ.சந்திரசேகரன் தடலாடி!


படம் தயாரிப்பது கடினமான தொழில், வீட்டை விற்று, நிலத்தை விற்று, அவமானங்களை சந்தித்து படங்களை தயாரிக்கிறார்கள். இதில் துரதிர்ஷ்டமாக அதிக படங்கள் தோல்வி அடைந்து விடுகின்றன. அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பாடல் உரிமை சென்றடைய வேண்டும். எனவே இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல.

படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், சண்டை இயக்குனர், கலை இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை. அதுபோல்தான் இசையமைப்பாளரும் அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர். எனவே பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். இவ்வாறு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்