ஆப்நகரம்

டூயட் ஆடவும், படத்தை அலங்கரிக்கும் பொம்மையாகவும் நடிக்க விருப்பமில்லை: ஸ்ரத்தா கபூர்!

சாஹோ படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் தமிழில் நடிக்க மறுத்த காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Aug 2019, 12:05 pm
ஸ்ரத்தா கபூர் பாலிவுட் முன்னணி ஹீரோயின். 2010ல் வெளியான Teen Patti என்ற ஹிந்திப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2013ல் வெளியான Aashiqui 2 படம், இவரை இந்தியா முழுதும் பிரபலமாக்கியது. தொடர்ந்து முன்னணி நாயகர்கள் படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி தவிர்த்து தெலுங்கில் வெளியாக உள்ள “சாஹோ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Samayam Tamil Shraddha Kapoor


பாகுபலி பிரமாண்டத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள படம்“சாஹோ”. இம்மாத இறுதியில் வெளியாகும் இந்தப் படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


Also Read: பிரச்சனைகளை கடந்து நடந்த நடிகர் சங்க தேர்தல் முடிவு எப்போது?

பிரபாஸ் ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள ஆக்ஷன் திரில்லர் படமான “சாஹோ” உலகம் முழுவதும் பல நாடுகளில் படம் பிடிக்கபட்டுள்ளது. இப்ப்டம் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்ட் 15 என இருந்த ரிலீஸ் தேதியை போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடியாததால் தள்ளிவைத்தனர். சாஹோ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 350 கோடி என்று கூறப்படுகிறது.

Also Read: Tharshan: பிக் பாஸ் தர்சன் கூட என்ன உறவு? மனம் திறந்த ஷனம் ஷெட்டி!

இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் க்ரைம் ஃபிராஞ்ச் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஹீரோவுக்கு இணையான கதாப்பாத்திரம் படத்தில் உள்ளது. மேலும் அவர் பல சண்டைக்காட்சிகளில் இப்படதில் நடித்துள்ளார். தெலுங்குப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்த்தில் பேசிய அவர், தமிழ்ப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது ஏன் என்றும் கூறியுள்ளார்.


Also Read: தென்னிந்தியாவை கலக்க வரும் ஶ்ரீதேவி மகள், ஜான்வி கபூர்!!

ஸ்ரத்தா கபூருக்கு தமிழில் இருந்து நடிப்பு வாய்ப்புகள் நிறைய வந்ததாம். ஆனால் அவையனைத்தும் ஹீரோவுக்கு ஜோடியாக, பொம்மையாக ஆடிப்பாடும் பெண் வேடங்களாம். அவர் ‘ வெறும் ஹீரோக்களுடன் டூயட் ஆடும் பெண்ணாகவும், படத்தை அலங்கரிக்கும் பொம்மையாகவும் இருக்க விரும்பவில்லை. சவாலான கதாபாத்திரங்களாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் தமிழில் இருந்து வந்த வாய்ப்புகள் அனைத்தும் டூயட் ஆடும் பெண் பாத்திரங்களே. அதனால் தான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்