ஆப்நகரம்

'சாஹோ' டீசரில் மிரட்டும் 'பாகுபலி' பிரபாஸ்

பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படமான ‘பாகுபலி 2’ இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

TNN 28 Apr 2017, 3:38 pm
சென்னை: பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படமான ‘பாகுபலி 2’ இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
Samayam Tamil saaho teaser prabhass film is high on action
'சாஹோ' டீசரில் மிரட்டும் 'பாகுபலி' பிரபாஸ்


'பாகுபலி 2' திரைப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் புதிய படமான ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் பிரபாஸின் 19-வது படமாகும்.

இயக்குனர் சுஜீத் இயக்கி வரும் ஆக்ஷன் கலந்த ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகி வரும் 'சாஹோ' திரைப்படத்தில் பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‘யு.வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வம்சி – பிரமோத் இருவரும் இணைந்து மெகா பட்ஜெட்டில் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஷங்கர்-ஹிசான்-லாய் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று 4 மொழிகளிலும் வெளியான மிரட்டலான மாஸ் டீசர், எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த டீசர் இன்று வெளியான 'பாகுபலி 2' திரைப்படத்தின் விளம்பர இடைவெளியில் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

‘சாஹோ’ படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த விவரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு (2018)வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

The makers of the forthcoming film Saaho have unveiled the teaser cut from the film, which stars Prabhas in the lead.

அடுத்த செய்தி

டிரெண்டிங்