ஆப்நகரம்

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் பிரமாண்ட வசூலை ஈட்டிய ‘சாமி 2’!

‘சாமி 2’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் மூன்று நாளில் பிரம்மாண்டமான வசூலை ஈட்டியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2018, 7:07 pm
‘சாமி 2’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் மூன்று நாளில் பிரம்மாண்டமான வசூலை ஈட்டியுள்ளது.
Samayam Tamil vikram-saamy


ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘சாமி 2’. இந்தப் படத்தில் விக்ரம், தந்தை மகன் என இரு வேடங்களில் நடிததுள்ளார். தந்தைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாகவும், மகனுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.ஆனால், ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் இப்படம் பெற்றது. அப்படியிருந்தும் முதல் மூன்று நாள் ‘சாமி- 2’ ரூ 33 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 17 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. துபாயில் ரூ.3 கோடி, மலேசியாவில் ரூ. 3 கோடி என ரூ.8 கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்