ஆப்நகரம்

Saamy Square: போலீஸ் மீது கடுப்பாக இருக்கும் சூழலில் வெளியாகிறது சாமி ஸ்கொயர் புதிய சாதனை

ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டர் புதிய சாதனைப் படைத்துள்ளது.

Samayam Tamil 24 May 2018, 2:09 pm
ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டர் புதிய சாதனைப் படைத்துள்ளது.
Samayam Tamil samy2


ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 15 வருடங்களுக்கு முன் உருவாகி வெற்றி பெற்ற படம் சாமி. இதன் 2ம் பாகம் விக்ரம், கீர்த்தி சுரேஷ்,ம் பிரபு, பாபி சிம்ஹா, சூரி மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த மோஷன் போஸ்டர் வீடியோ 31 லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். அதோடு 90 ஆயிரம் பேர் இதை லைக் செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் சிரஞ்சீவியின் சைரா படத்தின் மோஷன் போஸ்டர் தான் அதிக லைக்குகள் பெற்றிருந்தது. தற்போது சாமி ஸ்கொயர் இதை முறியடித்துள்ளது.

தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது மக்கள் வெறுப்பாக இருக்கும் நேரத்தில், சாமி 2 பட மோஷன் போஸ்டர் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்