ஆப்நகரம்

இந்த மாதம் திரைக்கு வருகிறது சாமி ஸ்கொயா்

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள சாமி ஸ்கொயா் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

Samayam Tamil 4 Sep 2018, 7:26 am
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள சாமி ஸ்கொயா் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வரவுள்ளது.
Samayam Tamil Saamy Square 1


விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சாமி ஸ்கொயர். இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து காமெடி நடிகர் சூரி, பிரபு, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் வரும் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இது கீர்த்தி சுரேஷ்க்கு முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலின் மூலம், கீர்த்தி சுரேஷ் பின்னணிப் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் வெளியீடு குறித்து ரசிகா்கள் பெரிதும் எதிா்பாா்த்திருந்த நிலையில் இம்மாதம் படம் வெளியாகும் என்று படக்குழு உறுதிப் படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்