ஆப்நகரம்

தோல்வியில் எஸ்.ஏ.சி! குஷி ஹீரோ என்ன செய்கிறார்?

நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் தோல்வியை தழுவியுள்ளார்.

TNN 4 Apr 2017, 3:40 pm
நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் தோல்வியை தழுவியுள்ளார்.
Samayam Tamil sac feel for lost in treasurer posting in producer council election
தோல்வியில் எஸ்.ஏ.சி! குஷி ஹீரோ என்ன செய்கிறார்?


தயாரிப்பாளர் தாணு, விஷால் மற்றும் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. இதில், கே.ராதாகிருஷ்ணன் அணியில் இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து விஷால் அணியில் எஸ்.ஆர்.பிரபு போட்டியிட்டார்.

இந்நிலையில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவியில் விஷாலும், பொருளாளர் பதவியில் விஷால் அணியில் எஸ்.ஆர்.பிரபுவும் வெற்று பெற்றனர். வெறும் 68 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தோல்வியடைந்தார். இது நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தோல்வியடைந்த சோகத்தில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SAC feel for lost in treasurer posting in Producer council election.

அடுத்த செய்தி

டிரெண்டிங்