ஆப்நகரம்

சாய் பல்லவிக்காக ‘கரு’ ஹேஸ்டேக்கை ட்ரெண்ட்டாக்கிய ரசிகர்கள்!

நடிகை சாய்பல்லவி நடிப்பில் தமிழில் வெளியாக உள்ள திரைப்படம் கரு. இந்தப் படத்தின் டிரெயிலர் இன்று வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

TNN 18 Nov 2017, 2:47 pm
நடிகை சாய்பல்லவி நடிப்பில் தமிழில் வெளியாக உள்ள திரைப்படம் கரு. இந்தப் படத்தின் டிரெயிலர் இன்று வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Samayam Tamil sai pallavi fans trends karu hash tag ahead of the trailer release
சாய் பல்லவிக்காக ‘கரு’ ஹேஸ்டேக்கை ட்ரெண்ட்டாக்கிய ரசிகர்கள்!


பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் சாய்பல்லவி. மலர் டீச்சர் வேடத்தில் வந்த சாய்பல்லவிக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ரசிகர்களாக மாறிவிட்டனர்.

இதனையடுத்து, அவர் தமிழ்படங்களில் நடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலே நடித்து வந்தார்.

இந்நிலையில், இவர் தமிழில் முதல்முறையாக இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் 4 வயது குழந்தையின் தாயாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டிரெயில இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் #Karu என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்