ஆப்நகரம்

Sai Pallavi: புஷ்பா 2ல் இணைந்த சாய் பல்லவி... அப்போ அது அவருக்குதானா?

Sai Pallavi: புஷ்பா 2 படத்தில் நடிகை சாய் பல்லவி இணந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 8 Mar 2023, 1:43 pm
கடந்த 2021ஆம் ஆண்டு பேன் இந்தியா படமாக வெளியாகி வசூலை குவித்த படம் புஷ்பா தி ரைஸ். தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ், அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் புஷ்பாநடித்திருந்தனர்.
Samayam Tamil Pushpa 2 Sai Pallavi

Amala Paul: சூர்யா பாடலுக்கு கவர்ச்சி உடையில் செம்ம ஆட்டம்... அமலா பாலின் ஹோலி வாழ்த்து!
நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மர கடத்தலை மைய்யமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு புஷ்பா படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் உலக அளவில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.


இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்று பாங்காக்கில் காட்சியாக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் புஷ்பா-தி ரூல் படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Bala health update: நடிகர் பாலா கவலைக்கிடம்... மருத்துவமனையில் குவியும் பிரபலங்கள்!
புஷ்பா தி ரூல் படத்திற்காக நடிகை சாய் பல்லவி 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புஷ்பா படத்தில் பழங்குடி இன பெண்ணாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புஷ்பா 2 படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth, Jayalalitha: ரஜினியை எதிரியாக பார்த்தாரா ஜெயலலிதா? புட்டு புட்டு வைத்த பயில்வான்!
புஷ்பா தி ரைஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் புஷ்பா இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடிய நடிகை சமந்தா இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில் நடிகை சாய் பல்லவி அதனை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்