ஆப்நகரம்

கவர்ச்சிக்கு ஓகே சொன்ன சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, இனி வரும் படங்களில் கவர்ச்சிக்கும் ஓகே என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சொல்லாமல் சொல்லியுள்ளார்.

Samayam Tamil 8 May 2019, 3:00 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்த ரானா நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ‘விரத பர்வதம் 1992’ என்று பெயரிட்டுள்ளனர்.
Samayam Tamil sai-pallavi


தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சி வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான நடிகைகள் செய்ய முன் வரவில்லை.ஆனால் சாய்பல்லவி தன் நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்து இவர் ஒப்புக்கொண்டார்.

இவரின் நடிப்பிற்கே மார்க்கெட்டில் தனி டிமேன்ட் இருக்கின்றது. இவர் டுயட் பாத்திரங்களை தவிர்த்து மிக கடினமான பாத்திரங்களையும் தேர்ந்தேடுத்து நடிக்கிறார். சாய்பல்லவி தமிழ் ,மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

தமிழ், மலையாளத்தில் கவர்ச்சியை தவிர்த்த சாய் பல்லவி தெலுங்கில் மட்டும் கவர்ச்சிக்கு ஓகே சொல்லியுள்ளார். அதே போல் கவர்ச்சிக்கு தயார் என்று சொல்லும் வகையில் உள்ளாடை தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்