ஆப்நகரம்

தன் சகோதரியை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தவுள்ளார் நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, தனது தங்கையை தமிழ் சினிமாவில் நாயகியாக விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

Samayam Tamil 26 Feb 2019, 4:54 pm
‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதையடுத்து அவர் தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
Samayam Tamil sai-pallavi


இடையில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சுமாரான வெற்றிதான் என்றாலும் அதில் சாய் பல்லவி தனுஷுடன் ஆட்டம் போட்ட ‘ரவுடி பேபி’ உலக அளவில் வைரலாகி பல சாதனைகளைப் படைத்தது. இதனால் சாய் பல்லவிக்கு மவுசு கூடியது.

‘மாரி 2’ படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்த திட்டம் போட்டிருந்தார் நடிகை சாய் பல்லவி. இதனால் தயாரிப்பாளர்கள் அவரை தங்களின் படங்களுக்கு புக் பண்ண பயப்படுகிறார்கள்.

ஏற்கனவே நடிகை சாய் ப்ல்லவி, சூர்யா & செல்வராகவன் கூட்டணியில் ‘என்.ஜி.கே.’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து பாசிலுடன் ‘அதிரன்’ படத்தில் நடித்துள்ளார். இவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. அதற்கு காரணம் தனது சம்பளத்தைக் கணிசமாக ஏற்றிருப்பதுதான்.

மிக விரைவிலேயே இவரது தங்கை ராதாவை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தவுள்ளார் நடிகை சாய் பல்லவி. ராதாவின் முதல் படம் அனேகமாக தனுஷுக்கு ஜோடியாக இருக்கக்கூடும் என்றே தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்