ஆப்நகரம்

ரிலீசுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் சைத்தான்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள சைத்தான் திரைப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வரும் நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது.

TNN 6 Nov 2016, 11:49 am
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள சைத்தான் திரைப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வரும் நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது.
Samayam Tamil saithan will be released on november 17 in tamil and telugu
ரிலீசுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் சைத்தான்..!


விஜய் ஆண்டனியின் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் வசூலை அள்ளிக்குவித்ததால்,அடுத்ததாக அவர் நடித்துள்ள சைத்தான் திரைப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சைத்தான் திரைப்படத்தின் வெளியீடு சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் நவம்பர் 17-ஆம் தேதி சைத்தான் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு தெலுங்கில் கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து,சைத்தான் திரைப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.தெலுங்கில் ”பெத்தாலுடு” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தணிக்கைத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சைத்தான் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Saithan will be released on November 17 in Tamil and Telugu

அடுத்த செய்தி

டிரெண்டிங்