ஆப்நகரம்

’புருஸ்லீ’ வெர்ஷனில் பட்டய கிளப்பும் ’சக்கப் போடு போடு ராஜா’ டிரைலர்!

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சக்கப் போடு போடு ராஜா படத்தின் வித்தியாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.

TNN 11 Nov 2017, 9:34 pm
சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சக்கப் போடு போடு ராஜா படத்தின் வித்தியாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sakka podu podu raja trailer is in brucelee version
’புருஸ்லீ’ வெர்ஷனில் பட்டய கிளப்பும் ’சக்கப் போடு போடு ராஜா’ டிரைலர்!


காமெடியான அறிமுகமாகி ஹீரோவாகும் முயற்சியில் சந்தானம் ஈடுபட்டுள்ளார். அவரது ஹீரோ படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக ஹீரோ கதாபாத்திர படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

அதில் சமீபத்தில் சக்கப் போடு போடு ராஜா படத்தின் டிரைலர் வெளியானது. இதில் சந்தானத்துடன், வைபவி ஷந்தில்யா, விவேக், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜி.எல்.சேதுராமன் இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை, புருஸ்லீ வெர்ஷனில் உருவாக்கியுள்ளனர்.



அவரது படங்களின் காட்சிகளை எடுத்து, பொருத்தமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Sakka Podu Podu Raja Trailer is in BruceLee Version.

அடுத்த செய்தி

டிரெண்டிங்