ஆப்நகரம்

முதன் முதலில் ரஜினியைப் பார்த்து ஷாக்கான நடிகை!

நடிகை சாக்ஷி அகர்வால் முதன் முதலில் ரஜினியை பார்த்தவுடன் ஷாக்காகியுள்ளார்.

TNN 1 Jun 2017, 8:04 pm
நடிகை சாக்ஷி அகர்வால் முதன் முதலில் ரஜினியை பார்த்தவுடன் ஷாக்காகியுள்ளார்.
Samayam Tamil sakshi agarwal shocking on seeing superstar rajinikanth
முதன் முதலில் ரஜினியைப் பார்த்து ஷாக்கான நடிகை!


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். ஆனால், யாருக்கு என்ன கேரக்டர் என்பதை மட்டும் இதுவரை யாரும் சொல்லவில்லை.

ரஜினியை முதன் முதலிலாக பார்த்த சாக்ஷி “மிகப்பெரிய படத்தில் என் பங்கும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி சாருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை, எனக்குக் கிடைத்த வரமாகத்தான் நான் பார்க்கிறேன். போட்டோஷூட்டில் அவரை முதன் முதலாகப் பார்த்தபோது, அப்படியே நான் ஷாக்காகிட்டேன். பின்னர் நான் ஒரு ரசிகையாக அவரை பார்த்து ரசித்தேன்” என்கிறார் சாக்ஷி அகர்வால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்