ஆப்நகரம்

மகனின் மோசமான செயலால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்!

அர்ஜுன் கபூர் செய்த வேலையால், போனி கபூர் படத்தில் சல்மான் கான் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 22 Jun 2018, 10:32 am
மும்பை: அர்ஜுன் கபூர் செய்த வேலையால், போனி கபூர் படத்தில் சல்மான் கான் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil 2


நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இவரின் தயாரிப்பில் சல்மான் கான் நோ என்ட்ரி-2 , வாண்டட் 2 படங்களில் நடிப்பார் என செய்திகள் வெளியானது. ஆனால் சல்மான் கான், போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் நடிகர் அர்ஜுன் கபூர் மீது உள்ள கோபத்தால் தான் சல்மான் கான் போனி கபூர் படத்தில் நடிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.

சல்மான் கான் தம்பி அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி மலாய்க்காவுக்கும், அர்ஜுன் கபூருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. தனது தம்பியின் வாழ்க்கையில் விளையாடிய அர்ஜுன் மீது சல்மான் கடும் கோபத்தில் உள்ளார்.

Salman Khan has refused to act in Boney Kapoor's No Entry 2 and Wanted 2 because of Arjun Kapoor.

அடுத்த செய்தி

டிரெண்டிங்