ஆப்நகரம்

நடிகை ரம்பாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சல்மான்கான்!

தபாங் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள சல்மான்கான், அங்கு நடிகை ரம்பாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Samayam Tamil 11 Jul 2018, 6:43 pm
தபாங் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள சல்மான்கான், அங்கு நடிகை ரம்பாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Samayam Tamil ramba1


நடிகை ரம்பா 1993ல் தமிழில் ‘உழவன்’ படத்தில் அறிமுகமானார். அதையடுத்து ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படம மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் நடிகை ரம்பா டொராண்டோ சென்றுள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் தன்னுடைய குழுவுடன் ‘டாபாங்க்’ என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்.

அந்த குழு டொராண்டோ வந்துள்ளனர் என்பதை அறிந்த நடிகை ரம்பா, சல்மான் கான் மற்றும் அவரது குழுவினரை சந்திக்க நேரில் சென்றுள்ளார். அதோடு சல்மான் கான், சோனாக்ஷி, ஜாக்குலின், பிரபு தேவா போன்றோர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்