ஆப்நகரம்

சல்மானின் 'சுல்தான்' இணையத்தில் லீக்?

கடந்த மாதம் அனுராக் கஷ்யப்பின் 'உட்தா பஞ்சாப்' படம் இணையத்தளத்தில் திருட்டுத் தனமாக வெளியானதையடுத்து தற்போது சல்மான் கான் -அனுஷ்கா ஷர்மா நடித்துள்ள 'சுல்தான்' படமும் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNN 6 Jul 2016, 12:14 pm
கடந்த மாதம் அனுராக் கஷ்யப்பின் 'உட்தா பஞ்சாப்' படம் இணையத்தளத்தில் திருட்டுத் தனமாக வெளியானதையடுத்து தற்போது சல்மான் கான் -அனுஷ்கா ஷர்மா நடித்துள்ள 'சுல்தான்' படமும் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil salman khans sultan leaked online
சல்மானின் 'சுல்தான்' இணையத்தில் லீக்?


ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜூலை 6) இந்தியா முழுவதும் சுமார் 4500 திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'சுல்தான்' ஒரு நாளைக்கு முன்னதாகவே இணையத்தில் திருட்டுத் தனமாக லீக் ஆனதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில், சைபர் கிரைம் நிபுணர் தீப் ஷங்கர் கூறுகையில், படத்தின் காப்பி டார்க்நெட்டில் உள்ளது, விரைவில் டோரென்ட்டிலும் கிடைக்கும் என கூறியுள்ளார். மற்றொரு சைபர் கிரைம் விசாரணையாளர் கிஷ்லாய் சவுத்திரி, 2 மணிநேரம் 36 நிமிடம் ஓடும் சுல்தான் படம் இணையத்தில் உள்ளது. சில ஊடகங்கள் கூட அதன் ஸ்னேப்ஷாட்களை பயன்படுத்தி வருவதாகவும், செவ்வாய்கிழமையிலிருந்து சுல்தான் தொடர்பான லிங்குகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தரப்பில் இணையத்தில் படம் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளது. சில சைபர் கிரைம் நிபுணர்கள், படம் தொடர்பான லிங்குகள் நீக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவும் மார்பிங் போட்டோக்களும் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதேபோன்று இந்த வார தொடக்கத்தில் விவேக் ஓப்ராய் நடித்த 'கிரேட் கிராண்ட் மஸ்தி' படம் வெளியீட்டிற்கு சுமார் 17 நாட்களுக்கு முன்னதாகவே வெளியானது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் சென்சார் காப்பி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்படம் தொடர்பான லிங்குகள், சமூகவலைத்தள பக்கங்களில் உள்ளவற்றை நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியானதாகக் கூறப்படும் இவ்விரு படங்களின் தயாரிப்பாளர்கள் தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்