ஆப்நகரம்

வாரத்தில் மூன்று படங்கள் வெளியாகும் சந்தோஷத்தில் சமந்தா!

நடிகை சமந்தா நடித்த மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவதால் அதிக சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.

Samayam Tamil 30 Jan 2018, 1:54 pm
நடிகை சமந்தா நடித்த மூன்று படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவதால் அதிக சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.
Samayam Tamil samantha is happy with three films in the week
வாரத்தில் மூன்று படங்கள் வெளியாகும் சந்தோஷத்தில் சமந்தா!


நடிகை சமந்தாவின் திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்தது. புகுந்த வீட்டார் சம்மதத்துடன் நடிகை சமந்தா மீண்டும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரின் பல படங்கள் தற்போது பல்வேறு கட்டங்களில் தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் சமந்தா நடித்த ‘இரும்புத்திரை’ படம் மார்ச் 29ம் தேதி வெளியாகவுள்ளது. அதே சமயத்தில் தமிழில் நடித்த ‘நடிகையர் திலகம்’ படமும் வெளியாகவுள்ளது. அது மட்டுமின்றி மார்ச் 30ம் தேதி ராம் சரணுடன் இணைந்த நடித்த ‘ரங்கஸ்தலம்’ படம் திரைக்கு வருகிறது. இப்படி இரண்டு நாட்களில் மூன்று படங்கள் வெளியாவதால் அதிக சந்தோஷத்தில் இருந்து வருகிறார் நடிகை சமந்தா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்