ஆப்நகரம்

எய்யா விக்னேஷ் சிவன், இதை மொதல்லயே சொல்லக் கூடாதா?

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த சமந்தா ரசிகர்கள் இப்படி கூறியுள்ளனர்.

Samayam Tamil 16 Dec 2020, 1:32 pm
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பார்கள் என்று லாக்டவுனுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பு கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Samayam Tamil vignesh shivan


காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சமந்தா பின்னர் விக்னேஷ் சிவனை அவரின் அலுவலகத்தில் சந்தித்து தன்னால் முடியாது என்று கூறி விலகியதாக லாக்டவுனுக்கு முன்பே செய்திகள் வெளியானது. அந்த தகவலை விக்னேஷ் சிவன் உறுதி செய்யவும் இல்லை, அதே சமயம் மறுக்கவும் இல்லை. சமந்தா விலகிவிட்டாரே அவருக்கு பதில் யார் நடிக்கப் போகிறாரோ என்று ரசிகர்கள் மாதக் கணக்கில் பேசினார்கள்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி காத்து வாக்குல ரெண்டு காதல் பட பூஜை நடந்தது. அப்பொழுது வெளியிடப்பட்ட போஸ்டரில் சமந்தாவின் பெயரை பார்த்த ரசிகர்கள், அவர் விலகவில்லையா என்று கேட்டார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
View this post on Instagram A post shared by Vignesh Shivan (@wikkiofficial)
சமந்தா நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவர் தன் காட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளார். விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோவை பார்த்த சமந்தா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகவில்லை என்று ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே அன்பான இயக்குநரே. இத்தனை மாதமாக எங்களை குழப்பிவிட்டீர்கள். இருந்தாலும் உங்களுக்கு இதெல்லாம் ஓவர். சஸ்பென்ஸ் வைக்கிறாராமாம் என்று தெரிவித்துள்ளனர்.

முதல்முறையாக சமந்தாவையும், நயன்தாராவையும் ஒரே படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க திருந்தவே மாட்டீங்களா விஜய் சேதுபதி?

முன்னதாக படப்பிடிப்புக்கு வந்த விஜய் சேதுபதிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அந்த வீடியோவில் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்ததை பார்த்த ரசிகர்கள், கொரோனா நேரத்தில் கூடவா, நீங்க திருந்தவே மாட்டீங்களா என்று கேட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்