ஆப்நகரம்

சமந்தாவின் ‘மிஸ் கிரான்னி’ படப்பிடிப்பு தொடங்கியது!

பாட்டி கேரக்டரில் நடிக்கவுள்ள சமந்தாவின் ‘மிஸ் கிரான்னி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

Samayam Tamil 1 Dec 2018, 5:31 pm
நடிகை சமந்தா தற்போது 70 வயது நிரம்பிய பாட்டி கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘மிஸ் கிராணி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார். ‘மிஸ் கிரான்னி’ என்ற படம் கொரிய படத்தின் ரீமேக்காகும்.
Samayam Tamil miss-granny


இந்தப் படத்தில் நடிகை சமந்தாவின் வயது 70. 70 வயது பாட்டியை போட்டோ எடுத்ததும் அவர் 20 வயது பெண்ணாக மாறிவிடுவதுதான் ‘மிஸ் கிரான்னி’ படத்தின் கதை. அந்த பாட்டியின் 20 வயது கதாபாத்திரத்திலும் நடிகை சமந்தா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ‘தியா’ படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சௌரியா கதாநாயகனாக நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே நந்தினியின் இயக்கத்தில் ‘கல்யாண வைபோகமே’ படத்தில் நடித்தவர். தற்போது ‘மிஸ் கிரான்னி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்