ஆப்நகரம்

Amala Akkineni: வைரலாகும் சமந்தாவின் மாமியார் அமலாவின் புதிய புகைப்படம்!

நடிகை சமந்தாவின் மாமியாரான அமலாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 8 Apr 2019, 3:39 pm
நடிகை சமந்தாவின் மாமியாரான அமலாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil amala


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த், கமல் ஹாசன், பிரபு, சத்யராஜ் ஆகியோருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதோடு, அமலாவின் வளர்ப்பு மகனாக நாக சைதன்யா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு நடிகை சமந்தாவிற்கும், நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து மஜிலி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், ஃபாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் கொடுத்து வருகிறது.

அண்மையில், இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இதில், சமந்தா, நாக சைதன்யா உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக மாமனாருடன் சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சமந்தாவின் மாமியாரான அமலாவின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்