ஆப்நகரம்

என்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே...: ‘ஷாக்’கான ரசிகர்கள் !

சென்னை: 96 படம் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ள கருத்தால், ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Samayam Tamil 18 Oct 2018, 9:31 pm
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த படம் 96. இப்படம் கடந்த 4ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் வெற்றியானது. வெளிநாட்டிலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
Samayam Tamil 8


இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் பள்ளி பருவ காதலை நினைவு படுத்துவதாக அனைவரும் கூறி வருகின்றனர். இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அதில் சமந்தா-நானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது ரீமேக் ஆகவாய்ப்பில்லை என சமந்தா தெரிவித்துள்ளார். டுவிட்டரில் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டியுள்ளார். மிக கடினமான கேரக்டர், தொடர்ந்து இதே போல அசத்துங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்