சமந்தாவும், நாக சைதன்யாவும் தாங்கள் பிரிவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். பிரிவுக்கு பிறகு நாக சைதன்யாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் சமந்தா. மேலும் இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டார். பிரிவுக்கு முன்பே சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்களாம்.
இந்நிலையில் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடிக்க முடியாது என நந்தினி ரெட்டியிடம் கூறிவிட்டாராம் சமந்தா. நாக சைதன்யாவை மாற்ற மனமில்லாமல் சமந்தாவுக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டாராம் நந்தினி.
சமந்தாவின் நெருங்கிய தோழி தான் இந்த நந்தினி ரெட்டி. முன்னதாக சமந்தாவை வைத்து ஜபர்தஸ்த், ஓ பேபி ஆகிய படங்களை இயக்கினார்.
பிரிந்தாலும் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என்றார்கள் சமந்தாவும், நாக சைதன்யாவும். ஆனால் பிரிவுக்கு பிறகு ஒரே இடத்திற்கு வந்த அவர்கள் ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார்களாம்.
இதையடுத்து நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடிக்க மறுத்திருக்கிறார் சமந்தா. அவரை பிரிந்தாலும் படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தா தான் என நாக சைதன்யா அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.