ஆப்நகரம்

சமந்தா-நாகசைத்தன்யா இதுக்குதான் ஒரே டாட்டூ குத்தி இருக்காங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவருடன் சேர்ந்து, ஒரே மாதிரியான டாட்டூ ஒன்றைக் குத்தியுள்ளார்.

Samayam Tamil 25 Jul 2018, 7:30 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவருடன் சேர்ந்து, ஒரே மாதிரியான டாட்டூ ஒன்றைக் குத்தியுள்ளார்.
Samayam Tamil சமந்தா-நாகசைத்தன்யா இதுக்குதான் ஒரே டாட்டூ குத்தி இருக்காங்க!!
சமந்தா-நாகசைத்தன்யா இதுக்குதான் ஒரே டாட்டூ குத்தி இருக்காங்க!!


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. கடந்த ஆண்டு சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும், தங்கள் கையின் பக்கவாட்டில் இரு மேல்நோக்கிய அம்புகளை டாட்டூவைக் குத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகை சமந்தாவிடம் அந்த டாட்டூவின் அர்த்தம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, அந்த டாட்டூ நிஜவாழ்க்கையையும், கணவன் மனைவியையும் குறிப்பதாக தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் இருக்கும் கணவன்-மனைவி இருவரும், எப்போதும் நிஜவாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த டாட்டூவைக் குத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்