ஆப்நகரம்

சமந்தா நடித்த யு டர்ன் படம் லாபமா ? நஷ்டமா ?

சமந்தா நடிப்பில் வெளியான திரில்லர் படமான யு டர்ன் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெற்று தரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது .

Samayam Tamil 4 Oct 2018, 1:01 pm
சமந்தா நடிப்பில் வெளியான திரில்லர் படமான யு டர்ன் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெற்று தரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது .
Samayam Tamil samantha-759


சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படம்யூ டர்ன். இந்த படத்தை பவன் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சத்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் தயாரித்திருந்தனர். செப்டம்பர் 14 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது.

ஒரு சாலையில் நடக்கும் தொடர் விதிமீறல்களும், அதனால் ஏற்படும் மர்ம மரணங்களையும் திரில்லிங்காக சொல்லும் கதைதான் ’யு டர்ன்’.இந்த படத்தினை ரூ. 9 கோடிகொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கினர். ஆனால் இந்த படம் ரூ 6.50 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த அளவுக்கு வெற்றி பெறவில்லைசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்