ஆப்நகரம்

பெரிய மாமியாரின் சேலையை உடுத்தும் சமந்தா!!

திருமணத்தின் போது நாகார்ஜுனா அம்மாவின் சேலையை உடுத்தும் சமந்தா!

TNN 4 Aug 2017, 1:35 pm
நடிகை சமந்தா, திருமணத்தின் போது நாகார்ஜுனா அம்மாவின் சேலையை உடுத்தி திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம்.
Samayam Tamil samantha wear to nagarjuna moms saree in her wedding
பெரிய மாமியாரின் சேலையை உடுத்தும் சமந்தா!!


நடிகை சமந்தா - நாக சைதன்யாவின் திருமணம் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை நாகார்ஜுனா & அமலா குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். திருமண நிகழ்ச்சி 6ம் தேதி தொடங்கி 3 நாட்கள் விழாவாக நடக்கவுள்ளதாக தெரிகிறது.

சமந்தாவின் திருமண ஆடைகள் வடிவமைக்கும் பொறுப்பை பிரபல டிசைனர் கிரஷா பஜாஜ் ஏற்றிருக்கிறார். என்ன தான் புது புது உடைகள் டிசைன் செய்தாலும், நாக சைதன்யாவின் பாட்டி உடுத்தியிருந்த பட்டு சேலையை சமந்தா திருமணத்தன்று உடுத்த உள்ளார். இந்த சேலையின் கூடுதலாக சில தங்க அணிகலன் இணைத்து டிசைன் செய்யப்படுகிறது.

சைதன்யாவின் பாட்டி சேலையை திருமணத்தின் போது உடுத்துவது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்